ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பவானி தேவி தனது அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனை ஜெஸிகா கார்பியை 15-11 என்ற கணக்கில் வென்ற நிலையில், இறுதிச் சுற்றில் அதே நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஹாம்சனை 15-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பவானி தேவி ஆவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது வெற்றி குறித்து பவானி தேவி கூறுகையில், "இந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் 3-ஆவது முறையாக பங்கேற்றுள்ளேன். முந்தைய சீசன்களில் காலிறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தேன். ஏற்கெனவே ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள நிலையில், உலக அளவிலான போட்டியில் பதக்கம் வெல்வது இது முதல் முறையாகும். இந்தப் போட்டியின் காலிறுதி முதலே ஆட்டம் கடினமாகத் தொடங்கியது. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றில் மிகவும் கடுமையாகப் போராடி வெற்றி பெற வேண்டியிருந்தது' என்றார்.
தங்கம் வென்ற பவானி தேவிக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவியை வாழ்த்தி ட்வீட் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனைக்கு வாழ்த்துகள். ஜெய் பவானி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


