ஐசிசி போட்டியில் இந்திய அணியை வெல்வதென்பது பாகிஸ்தான் அணிக்குப் பெரிய சிரமமான காரியம். அந்த அணிக்குப் பெரும்பாலும் தோல்விகள்தான் கிடைத்துள்ளது. அதிலும் உலகக்கோப்பைப் போட்டிகளில் பலமான அடிகள். அதனாலோ என்னவோ இந்தமுறை இந்திய அணியை அதிகமாகச் சீண்டிப் பார்க்கிறார்கள் பாகிஸ்தான் வீரர்கள்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான், கோலியை வம்புக்கு இழுக்கும் விதத்தில் பேட்டியளித்துள்ளார்.
ஜூன் 4-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அதுகுறித்து அவர் கூறியதாவது:
கோலியைக் கண்டு பாகிஸ்தான் அணி அஞ்சவில்லை. அவரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும். கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் நான்கு போட்டிகளில் நான் அவரை மூன்றுமுறை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.
இந்திய ரசிகர்கள் முன்னிலையிலேயே கோலிக்குப் பந்துவீசியுள்ளேன். எனவே இங்கிலாந்தில் அவரை எதிர்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. நான் இந்தமுறை அவரை எதிர்கொள்ளும்போது என்னிடம் தடுமாறிய அதே கோலியாகவே அவரை எண்ணுவேன். இது தவறாக இருக்கலாம். அவரும், அவர் விக்கெட்டுகளை எடுத்த அதே ஜுனைத் கானாகவே என்னை எண்ணுவார். இதனால் அவர் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டைப் பறிகொடுக்கலாம்.
கோலி, உலகம் முழுக்க சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசியுள்ளார். ஆனால் என்னிடம் அவரால் ரன்கள் எடுக்கவே முடியவில்லை. இது எனக்குப் பெருமைக்குரிய விஷயம். அந்தச் சாதனையை சாம்பியன் டிராபி போட்டியிலும் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


