நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

திரும்ப வர்றோம்! சென்னை சூப்பர் கிங்ஸ் கர்ஜனை!

சிங்கங்களே விசில் போட ரெடியா? இந்தமுறை இன்னும் சத்தமாக விசில் அடிப்போம்....

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:34 pm

எழில்

அடுத்த ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்குபெறுவோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. தடை இந்த வருட ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மீண்டும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை இண்டியன்ஸ். 

முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது.

இந்நிலையில் நேற்றைய இறுதிச்சுற்று முடிந்தவுடனே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களைத் தந்தது. 

* சிங்கங்களே விசில் போட ரெடியா?
* இந்தமுறை இன்னும் சத்தமாக விசில் அடிப்போம். விசில்போடு என்று டேக் செய்து ட்வீட் செய்யுங்கள்
* அடுத்தமுறை நம்முடைய சேப்பாக்கம் மைதானமும் மீண்டும் ஐபிஎல் போட்டியை நடத்தும்.
* அடுத்த ஐபிஎல்-லில், நாங்கள் திரும்ப வருகிறோம்

இவ்வாறு சிஎஸ்கே ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதமாக ட்வீட்களை வெளியிட்டது. இந்த ட்வீட்கள் ஆயிரக்கணக்கில் சிஎஸ்கே ரசிகர்களால் பகிரப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.