/

ஐபிஎல்: குஜராத் பேட்டிங்! யுவ்ராஜுக்குக் காயம்!

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :13 மே 2017, 10:17 am

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் குஜராத் அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் ஹைதராபாதைச் சந்திக்கிறது.

ஆனால் ஹைதராபாத் அணிக்கோ, இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, குஜராத்தை வீழ்த்தும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக தோற்கும்பட்சத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புணே-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். அதில் பஞ்சாப் தோற்கும்பட்சத்தில், ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையெனில் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதியுள்ளன. அவையனைத்திலும் குஜராத் அணிதான் வெற்றி கண்டுள்ளது.

மிகமுக்கியமான போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த யுவ்ராஜ் சிங், காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக தீபக் ஹூடா இடம்பெற்றுள்ளார். குஜராத் அணியில் பசில் தம்பி, தவல் குல்கர்ணிக்குப் பதிலாக பிரவீன் குமார், முனவ் படேல் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.