ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் சோனி நிறுவனம் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் தமிழ் வர்ணனைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5 முதல் மே 21 வரை நடக்கவுள்ளது. சோனி சிக்ஸ், சோனி ஈஎஸ்பின், சோனி மேக்ஸ் ஆகிய சானல்களில் ஐபிஎல் போட்டிகளில் ஒளிபரப்பாகின்றன.
சோனி சிக்ஸில் ஆங்கிலத்தில் வர்ணனை இருக்கும். தமிழ், தெலுங்கு, வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் வர்ணனை சோனி ஈஎஸ்பின் சானல்களில் வரும். சோனி மேக்ஸ் சானலில் ஹிந்தி வர்ணனையுடன் போட்டிகள் ஒளிபரப்பப்படும். இந்த வருடம் கன்னட மொழியில் வர்ணனை இருக்காது என்று சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இறுதி ஆட்டமும், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. அட்டவணையிட்டபடி, ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள், அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


