சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஹோம் சீஸனில் அசத்திய இந்தியா! சாதனைப் புள்ளிவிவரங்கள்

இந்த ஹோம் சீஸனில் விளையாடிய 13 டெஸ்டுகளில் 10-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:20 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

* இந்த ஹோம் சீஸனில் விளையாடிய 13 டெஸ்டுகளில் 10-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது இந்திய அணி. இரண்டு போட்டிகள் டிரா ஆயின. 

* இந்த ஹோம் சீஸனில் இந்தியா விளையாடிய 13 டெஸ்டுகளின் புள்ளிவிவரம்: 28,705 பந்துகள், 14,862 ரன்கள், 428 விக்கெட்டுகள்.

* இந்த சீஸனில் உமேஷ் யாதவ் அற்புதமாகப் பந்துவீசியுள்ளார். 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதான் ஒரு தொடரில் அவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள். முன்னதாக 2011-12-இல் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவருடைய அதிகபட்ச விக்கெட் சாதனையாக இருந்தது.

* ராகுல் இந்தத் தொடரில் 6 அரை சதங்கள் எடுத்துள்ளார். 1993-ல் கிரஹாம் கூச் இதுபோல ஆஸி. அணிக்கு எதிராக 6 அரை சதங்கள் எடுத்தார். அதன்பிறகு ஆஸி. அணிக்கு எதிராக ஒரே தொடரில் 6 அரை சதங்கள் எடுத்த வீரர் ராகுல் தான். 

ஒரு டெஸ்ட் தொடரில் 6 அரை சதங்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர், ராகுல். இதற்கு முன்பு மொஹிந்தர் அமர்நாத் 1982-83-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 6 அரை சதங்கள் எடுத்தார்.  

* இந்த சீஸனில் 6 அரை சதங்களை விளாசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. சர்வதேச அளவில் ஒரு சீஸனில் 50 விக்கெட் மற்றும் 500 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா. கபில்தேவ் (1979-80), மிட்செல் ஜான்சன் (2008-09) ஆகியோர் மற்ற இருவர். இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 556 ரன்களையும், 71 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

* அனைத்து டெஸ்ட் நாடுகளுடனான கடைசி டெஸ்ட் தொடர்களில் இந்தியா:

ஆஸ்திரேலியா - வெற்றி 
வங்கதேசம் - வெற்றி 
இங்கிலாந்து - வெற்றி 
நியூசிலாந்து - வெற்றி
பாகிஸ்தான் - வெற்றி
இலங்கை - வெற்றி
தென் ஆப்பிரிக்கா - வெற்றி
மேற்கிந்தியத் தீவுகள் - வெற்றி
ஜிம்பாப்வே - வெற்றி

இதுபோல இதற்கு முன்பு சாதித்த அணிகள் - ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே. 

* முதல் டெஸ்டை இழந்தபிறகு இந்தியா வென்ற தொடர்கள்:

v இங்கிலாந்து, 1972-73
v ஆஸ்திரேலியா, 2000-01
v இலங்கை, 2015
v ஆஸ்திரேலியா, 2016-17

எல்லாவற்றிலும் 2-1 தான் முடிவுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.