ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

தர்மசாலா டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என...

News image
Updated On :28 மார்ச் 2017, 5:37 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 118.1 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல் 60, புஜாரா 57, கேப்டன் ரஹானே 46 ரன்கள் எடுத்து வெளியேற, பிறகு ஆடவந்த ஜடேஜா, 95 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்குச் சுருண்டது.  இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 106 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரரான கே.எல்.ராகுல், கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 13, முரளி விஜய் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டம் தொடங்கியபோது ஆஸி. அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முரளி விஜய் மிகவும் தடுமாறினார். பிறகு 8 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த புஜாரா எதிர்பாராதவிதமாக ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி எதுவும் கவலைப்படவில்லை. ரஹானே கம்மின்ஸின் ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 

இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து தர்மசாலா டெஸ்ட் போட்டியை வென்றதோடு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. ராகுல் 52, ரஹானே 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்த ஹோம் சீஸனில் இந்திய அணி நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலிய ஆகிய அணிகளை எதிர்கொண்டது. இதில் அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது. ராஞ்சி டெஸ்ட் வரை இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தினார் கோலி. ஆனால் தர்மசாலா டெஸ்டில் கோலியால் விளையாத முடியாத நிலை உருவானபோதும் இந்திய  அணியை அருமையாக வழிநடத்தி வெற்றித் தேடித்தந்துள்ளார் ரஹானே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.