சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

டெஸ்ட்: இந்தியா அதிரடியான பந்துவீச்சு! ஆஸி. அணி தடுமாற்றம்!

தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:19 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா அரை சதம் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற உதவினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. சாஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

கடைசி 3 நாள்களும் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது மிகவும் கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றாலொழிய இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினம் என்கிற சூழலில் இன்று காலை ஜடேஜாவும் சாஹாவும் அற்புதமாக ஆஸி.யின் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். இன்றைய நாளின் முதல் பந்திலேயே அவுட் ஆனார் ஜடேஜா. ஆனால் டிஆர்எஸ் உதவியுடன் அம்பயரின் முடிவு திரும்பப்பெறப்பட்டது. இதை ஜடேஜா சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸ், பவுண்டரி என எடுத்து ஆஸி. அணிக்குச் சரியான பதிலடி கொடுத்தார். ஜடேஜா - சாஹா கூட்டணி இந்த ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி ஆஸி.யின் திட்டங்களை முறியடித்தார்கள். ஜடேஜா 83 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். 

பிறகு எதிர்பாராதவிதமாக 63 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜடேஜா. அதன்பின்னர் கடகடவென மீதமுள்ள விக்கெட்டுகள் விழுந்தன. புவனேஸ்வர் குமார் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அரை சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாஹா 31 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார். கடைசியாக குல்தீப் யாதவின் விக்கெட்டை (7 ரன்கள்) வீழ்த்தினார் லயன். இது அவருடைய 5-வது விக்கெட்டாகும்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 118.1 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லயன் 5 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு ஆட ஆரம்பித்த ஆஸி. அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் தவித்தது. உமேஷ், புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் துல்லியமாகப் பந்துவீசி ஆஸி. பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்கள். உமேஷ் யாதவ், வார்னரை 6 ரன்களில் வீழ்த்தினார். இதன்பிறகு ஃபார்மில் உள்ள ஸ்மித்தை 17 ரன்களில் வெளியேற்றினார் புவனேஸ்வர் குமார். உமேஷ் பந்துவீச்சில் மிகவும் தடுமாறிய ரென்ஷா, 8 ரன்களில் வீழ்ந்தார். இதனால் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது ஆஸி. அணி.

ஹேண்ட்ஸ்காம்பும் மேக்ஸ்வெல்லும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார்கள். ஹேண்ட்ஸ்காம்ப்பை 18 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். அடுத்த ஓவரிலேயே 1 ரன்னில் ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார் மார்ஷ்.

இதனால் தேநீர் இடைவேளையின்போது 25.3 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது ஆஸி. அணி. அந்த அணி 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 60 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.