ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

டெஸ்டில் திருப்புமுனை! ஜடேஜாவின் அரை சதத்தால் இந்தியா முன்னிலை!

ஜடேஜா அரை சதம் எடுத்துள்ளார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2017, 5:27 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜடேஜா அரை சதம் எடுத்துள்ளார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.

ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. சாஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

கடைசி 3 நாள்களும் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது மிகவும் கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றாலொழிய இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினம் என்கிற சூழலில் இன்று காலை ஜடேஜாவும் சாஹாவும் அற்புதமாக ஆஸி.யின் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். இன்றைய நாளின் முதல் பந்திலேயே அவுட் ஆனார் ஜடேஜா. ஆனால் டிஆர்எஸ் உதவியுடன் அம்பயரின் முடிவு திரும்பப்பெறப்பட்டது. இதை ஜடேஜா சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸ், பவுண்டரி என ஆஸி.க்குத் தக்க பதிலடு கொடுத்தார். ஜடேஜா - சாஹா கூட்டணி இந்த ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்து ஆஸி.யின் திட்டங்களை முறியடித்தார்கள். 

ஜடேஜா 83 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். இதனால் இந்திய அணி 109 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்து 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை ஜடேஜா - சாஹா கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.