திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

இது உன்னுடைய மேட்ச்: குல்தீப் யாதவை ஊக்கப்படுத்தும் சச்சின்!

அவர் தன் டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த விதமும் என்னை மிகவும் கவந்துள்ளன.

News image
Updated On :25 மார்ச் 2017, 9:46 am

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

காயம் காரணமாக கேப்டன் கோலி விலகியுள்ளார். இதனால் இளம் வீரரான 22 வயது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போட்டிகளில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ், துலிப் டிராபி, ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். சர்வதேசப் போட்டியில் விளையாடும் முதல் இந்திய சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் குல்தீப் யாதவ். 

இன்றைய டெஸ்ட் போட்டியில் முதலில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். பிறகு ஹேண்ட்ஸ்காம்ப், மேக்ஸ்வெல் ஆகியோரை க்ளீன் போல்ட் செய்து இந்திய அணிக்குப் பலம் அளித்தார். இதையடுத்து சச்சின் டெண்டுல்கர் குல்தீப்புக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

குல்தீப் யாதவின் பந்துவீச்சின் தன்மையும் அவர் தன் டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த விதமும் என்னை மிகவும் கவந்துள்ளன. இதேபோல சிறப்பாகப் பந்துவீசவேண்டும் குல்தீப். இது நீ பிரகாசிக்கும் டெஸ்ட் போட்டியாக இருக்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.