அஸ்வினைச் சமாளிப்பது எப்படி? டேவிட் வார்னர் புதிய திட்டம்!
வலைப்பயிற்சியில் நான் சில விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் பேட்டிங் செய்யும்போது...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதன்மூலம், புணே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியிடம் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதற்கு பழி தீர்த்துக் கொண்டது இந்திய அணி. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தற்போது சமன் செய்துள்ளது இந்திய அணி.
வார்னரும் அஸ்வினும் இதுவரை மோதிக்கொண்ட 23 இன்னிங்ஸ்களில் 9 முறை வார்னரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஆறுமுறை வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அஸ்வினை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? வார்னர் கூறியதாவது:
வலைப்பயிற்சியில் நான் சில விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் பேட்டிங் செய்யும்போது ஒருமுனையில் அவர் எப்போதும் பந்துவீசக் கூடும். கடந்த டெஸ்ட் போட்டியில் நான் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சி செய்தேன். வெவ்வெறு விதத்தில் எம்பிக் குதிக்கும் பந்துகள் தான் சவாலாக உள்ளன. அப்போது ஸ்விட்ச் ஹிட் செய்ய முயற்சி செய்தால் நீங்கள் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆக வாய்ப்புண்டு. ரிவர்ஸ் ஸ்வீப் செய்தால் அவுட் ஆகமாட்டீர்கள். நீங்கள் உஷாராக இருக்கவேண்டும். எனக்குத் தெரியும். நான் ஏதாவது ஷாட் அடிக்க ஆரம்பித்தால் அவர் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்வார். அவர் ஏதாவது முயற்சி செய்தால் நான் எப்படி ரன் எடுப்பேன் என யோசிப்பேன். அது அவருக்கான பாராட்டு. அஸ்வின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். இந்திய மண்ணில் நிறைய விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதை நான் மதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...