தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

டெஸ்ட் தொடர்: ஸ்டார்க்குக்குப் பதிலாக கம்மின்ஸ் தேர்வு!

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக...

News image
Updated On :11 மார்ச் 2017, 6:22 am

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பேட் கம்மின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஸ்டார்க்கின் வலது கால் எழும்பில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இது குறித்து ஆஸ்திரேலிய முடநீக்கியல் நிபுணர் டேவிட் பீக்லே கூறுகையில், "பெங்களூரில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது மிட்செல் ஸ்டார்க்கின் வலது காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருடைய வலது கால் எழும்புப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அவர் நாடு திரும்புகிறார்' என்றார். ஏற்கெனவே மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகிய நிலையில், இப்போது மிட்செல் ஸ்டார்க்கும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், "ஸ்டார்க்கின் விலகல், ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அது நிச்சயமாக ஆஸ்திரேலியாவின் வெற்றியைப் பாதிக்கும்' என்றார்.

இந்நிலையில் ஸ்டார்க்குக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.