தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இந்திய அணியில் வாய்ப்பு கோரும் தினேஷ் கார்த்திக்!

கீப்பிங்கிலும் என பலவீனங்களைக் கண்டடைந்து அதில் முன்னேற்றம் அடைந்துள்ளேன்... 

News image
Updated On :10 மார்ச் 2017, 11:04 am

தினேஷ் கார்த்திக் கடைசியாக 2014-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார்.

தோனி இந்திய அணியில் இருந்தபோது வாய்ப்பு மறுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். பேட்ஸ்மேனாக அவர் இங்கிலாந்தில் சாதித்து மேலும் பல வாய்ப்புகள் பெற்றாலும் அவரால் நிரந்தரமாக இந்திய அணியில் நீடிக்கமுடியவில்லை.

இப்போது உள்ளூர் போட்டிகளில் அசத்திக்கொண்டு வருகிறார். விஜய் ஹசாரே போட்டியில் 397 ரன்கள் எடுத்து 99.25 சராசரி பெற்றுள்ளார். ரஞ்சிப் போட்டியில் 704 ரன்கள் எடுத்து 54.15 சராசரி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கும் கார்த்திக், இந்தியாவுக்காக ஆட விருப்பப்படுகிறார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடவேண்டும் என்று கனவு காண்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாடமுடியும் என நினைக்கிறேன். இந்தியாவுக்காக நான் நெ.1 இடத்திலிருந்து நெ.7 வரை விளையாடியுள்ளேன். என்னுடைய ஆட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இப்போது என்னுடைய இன்னிங்ஸை இன்னும் பக்குவத்துடன் சரியான ஸ்டிரோக்குகளுடன் அணுகுகிறேன். கீப்பிங்கில் சமீர் டிகேவுடன் இணைந்து பயிற்சி பெறுகிறேன். கீப்பிங்கிலும் என பலவீனங்களைக் கண்டடைந்து அதில் முன்னேற்றம் அடைந்துள்ளேன் என்கிறார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன் டிராபி போட்டிக்கு கார்த்திக் தேர்வு செய்யப்படுவாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.