33 வயதில் 51 டெஸ்டுகள் விளையாடியுள்ள விஜய், 17 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
அவர் டெஸ்ட் வீரர் மட்டும்தானா? ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் உண்டா?
இதுபற்றி ஒரு பேட்டியில் முரளி விஜய் கூறியதாவது:
நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடத்தொடங்கியபோது என்னை 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரர் என்று முத்திரை குத்தினார்கள். டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடியபோது நான் டெஸ்ட் வீரர் என்கிறார்கள். இதர வகை கிரிக்கெட்டுகளில் விளையாடமுடியாது என்றார்கள். மக்களின் கருத்துகளை என்னால் ஆராய்ந்து கொண்டிருக்கமுடியாது. என்னுடைய பிரதான வேலை - வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெற உதவுவதுதான். 50 ஓவர், டி20 கிரிக்கெட்டுகளில் எனக்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடிக்கவேண்டும் என்பதே என் லட்சியம். என் முன்னே உள்ள தடைகளைத் தாண்டி 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விஜய் விளையாடுவாரா?
அறுவைசிகிச்சை முடிந்து இரண்டரை மாதங்கள் ஆகியுள்ளன. முழு உடற்தகுதி அடைய முழு முயற்சி எடுத்து வருகிறேன். காயம் தன்னால் சரி ஆகவேண்டும். அடிப்படைப் பயிற்சிகள் எடுத்துள்ளேன். நேஷனல் கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று நிலவரம் எப்படி என்று அறிந்துகொள்வேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


