அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் பி.வி. சிந்து

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

News image
Updated On :22 ஜூன் 2017, 11:19 am

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பி.வி.சிந்து தனது 2-வது சுற்றில்  21-13, 21-18 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜியாவ்ஸின்னைத் தோற்கடித்தார். இதன் அடிப்படையில் சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதேபோல ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள். இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் உலகின் நெ.1 வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுயாங் யூக்ஸியாங்கை வீழ்த்தினார். 

காலிறுதியில் ஸ்ரீகாந்த் - சாய் பிரணீத் ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.