ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடவுள்ளார் யூசுப் பதான்

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் விளையாடவுள்ளார். 

News image
Updated On :16 ஜூன் 2017, 5:04 am

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் விளையாடவுள்ளார். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெறவுள்ளார். கெளதம் கம்பீர் ஏதாவதொரு டிஎன்பிஎல் அணியின் ஆலோசகராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப் போட்டியினால் இளைஞர்கள் பலர் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். உள்ளூர் திறமைகளுக்கு மிகவும் உதவுகிறது. டிஎன்பிஎல் போட்டியில் விளையாடி ஒரு இளைஞரின் வாய்ப்பைப் பறிக்க விரும்பவில்லை. ஆலோசகராகப் பணியாற்ற அணிகளிடம் பேசிவருகிறேன் என்று கூறியுள்ளார். 

தற்போது டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர் யூசுப் பதான் விளையாடவுள்ளார். டிஎன்பிஎல் ஏலத்தில் இடம்பெறக்கூடிய வீரர்களின் பட்டியலில் யூசுப் பதான் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து அவர் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. 

2012-ம் ஆண்டு இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய யூசுப் பதான், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் பியூஷ் சாவ்லா, அன்கீத் பாவ்னே, ராபின் பிஸ்ட் ஆகியோரும் டிஎன்பிஎல்-லில் பங்கேற்கவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.