இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் ரோஹித் சர்மா
இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயருக்குப் பதிலாக ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வில் இருந்த கே.எல்.ராகுல் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் 3-ஆவது தொடக்க வீரராக அபிநவ் முகுந்த் இடம்பெற்றுள்ளார். முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபிநவ் முகுந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...