பிரமாணப் பத்திரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்று பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்குருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். மேலும், பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை) பிரதிநிதியை நியமிப்பது, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது ஆகியவை அதன் தன்னாட்சி அந்தஸ்தைப் பாதிக்கும் என கடிதம் அளிக்குமாறு ஐசிசியிடம் அனுராக் தாக்குர் கோரிக்கை விடுத்ததாக லோதா குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அனுராக் தாக்குர், அதுபோன்ற கடிதம் எதையும் கேட்கவில்லை என தெரிவித்தார். ஆனால் ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அனுராக் தாக்குர் ஐசிசியிடம் கடிதம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், அனுராக் தாக்குர், பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை கடந்த ஜனவரி 2-ஆம் தேதி பதவி நீக்கம் செய்தது.
மேலும் பிரமாணப் பத்திரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது தொடர்பாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அனுராக் தாக்குர், நான் வேண்டுமென்றே பொய் வாக்குமூலம் அளிக்கவில்லை என தெரிவித்ததோடு, எந்த மாதிரியான சூழலில் தவறு நடந்தது என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று தொடர்ந்தது. அப்போது தாக்குர் தெரிவித்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதற்குப் பதிலாக பிரமாணப் பத்திரத்தில் தன்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பைத் தெரிவிக்குமாறு அனுராக் தாக்குருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூலை 14 அன்று உச்ச நீதிமன்றத்தில் அனுராக் தாக்குர் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம்!

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி நீக்கம்: வைகோ கண்டனம்

டிசி படப்பிடிப்பு நிறைவு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


