சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். கோப்பையை வென்ற பாகிஸ்தானுக்கு ரூ.14 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்ற இந்தியாவுக்கு ரூ.7 கோடியும் பரிசாக வழங்கப்பட்டன.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்ததைத் தொடர்ந்து, ஒரு நாள் போட்டியின் கேப்டனான சர்ஃப்ராஸுக்கு டெஸ்ட் கேப்டன் பதவியை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி 32-வது டெஸ்ட் கேப்டன். இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாகியுள்ளார் சர்ஃப்ராஸ்.
அக்டோபரில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃப்ராஸ் கேப்டனாகச் செயல்படுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


