தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:25 pm

Raghavendran

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. 

ஜனவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை முதல் டெஸ்ட், ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் மற்றும் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 3-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான  17 பேர் கொண்ட இந்திய அணி டிசம்பர் 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ஒருநாள் போட்டித் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் போட்டித் தொடர் விவரம் பின்வருமாறு:

முதல் ஒருநாள் - டர்பன் - பிப்ரவரி 1

2-ஆவது ஒருநாள் - சென்சூரியன் - பிப்ரவரி 4

3-ஆவது ஒருநாள் - கேப்டவுன் - பிப்ரவரி 7

4-ஆவது ஒருநாள் - ஜொஹன்னஸ்பர்க் - பிப்ரவரி 10

5-ஆவது ஒருநாள் - போர்ட் எலிசபத் - பிப்ரவரி 13

6-ஆவது ஒருநாள் - சென்சூரியன் - பிப்ரவரி 16

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.