தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இந்தூர் டி20-யில் இந்தியா முதல் பேட்டிங்

2-ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:25 pm

Raghavendran

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் ஒரு வெற்றியுடன் முன்னிலையில் உள்ள இந்தியா, 2-ஆவது ஆட்டத்தையும் கைப்பற்றி தொடரை வெல்லும் முனைப்பில் களம் காணும். மறுபுறம், இலங்கை இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசரா பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அணி வீரர்கள் விவரம்:

இந்தியா:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜயதேவ் உனாத்கட், ஜஸ்ப்ரீத் பும்ரா, யசுவேந்திர சாஹல்.

இலங்கை:

நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), உபுல் தரங்கா, குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், சதீர சமரவிக்ரமா, அசெல குணரத்னா, திசரா பெரேரா (கேப்டன்), சதுரங்கா டி சில்வா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்த சமீரா, நுவன் பிரதீப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.