இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்த ஆட்டத்தில் இந்தியா 127 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது. இலங்கையின் தம்புல்லா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 28.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஷிகர் தவன் 90 பந்துகளில் 132, கோலி 70 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷிகர் தவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்றைய ஆட்டத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. உலகமெல்லாம் ரோஹித் சர்மா சாதித்துக் காட்டினாலும் இலங்கை மட்டும் அவருக்கு ராசியில்லாததாக உள்ளது.
இலங்கையில் விளையாடிய கடந்த 10 ஆட்டங்களில் அவர் எடுத்த ரன்கள்:
37 ரன்கள், சராசரி 3.70.
4
0
11
5
5
0
0
4
4
4
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்திலிருந்தாவது ரோஹித் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராக்காவில் ஃபெமினா ஜார்ஜ்?

ஆஜராக முடியாது! கேஜரிவாலை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவும் நீதிபதிக்கு கடிதம்!

மகளிர் உதவித்தொகை என்ன ஆனது? அதிஷி கேள்வி?

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் சுட்டுக் கொலை!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


