பெண்களுக்கான மாத உதவித்தொகை ரூ. 2,500 வழங்கும் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என ரேகா குப்தா தலைமையிடம் தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
கடந்தாண்டு ஜனவரியில் நடைடெபற்ற தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, தேசியத் தலைநகரில் உள்ள பெண்களுக்கு அந்தாண்டின் மார்ச் 8ஆம் தேதி முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் ரூ. 2,500 வரவு வைக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
இதற்காகப் பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை வங்கிக் கணக்குகளுடன் இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டாகவும், அந்தத் தொகை வரவு வைக்கப்பட்டதை உறுதிசெய்யும் குறுஞ்செய்தி அவர்களுக்கு அனுப்பப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2025 மார்ச் 8 கடந்து, தற்போது மார்ச் 8, 2026-ம் கடந்துவிட்டது. ஆனால் தில்லியில் உள்ள பெண்கள் இதுவரை அந்தத்தொகையைப் பெறவில்லை. இந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே பாஜக பெண்களின் வாக்குகளைப் பெற்றதாக அதிஷி குற்றம் சாட்டினார்.
அதோடு, பொதுச் சேவைகளைப் பெறுவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். முன்னதாக தில்லி போக்குவரத்து பேருந்துகளில் எளிதாகப் பயணம் செய்தவர்கள், பிங்க் கார்டுகளுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இலவச மருந்துகள், சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளைப் பெறுவது கடினமாகிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எம்.பிக்கள் பாஜகவுடன் இணைந்த விவகாரம் குறித்துப் பேசிய ஆம் ஆத்மி தலைவர், அந்த இணைப்பை ஏற்றுக்கொள்வதாக மாநிலங்களவைத் தலைவர் எடுத்த முடிவு, அரசியலமைப்பு விதிகளுக்கும், கட்சி மாறுதல் தடைச் சட்டங்களுக்கும் எதிரானது.
இந்த நடவடிக்கை கட்சி மாறுதல் தடைச் சட்டத்தின் கட்டமைப்பை மீறுவதாகவே ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான வழிகள் மூலம் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எழுப்புவோம் என்று அவர் தெரிவித்தார்.
Summary
Leader of Opposition in Delhi Assembly Atishi on Tuesday questioned Rekha Gupta government over its poll promise of providing Rs 2,500 per month to women and termed the acceptance of the merger of seven AAP Rajya Sabha MPs with the BJP as "unconstitutional".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! ராகுல் வீட்டின் அருகே பாஜக மகளிரணி போராட்டம்!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை



