ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

49 ரன்களில் ஆல் அவுட்: கோலி கோபம்!

பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

News image
Updated On :24 ஏப்ரல் 2017, 9:10 am

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா, 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. பெங்களூர் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டைமல் மில்ஸ், பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெங்களூர் தோல்வி: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. இறுதியில் பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 9 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்டர் நைல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகளும் வீழ்ந்தது இது 2-ஆவது முறையாகும். பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணி 2009-ல் பெங்களூருக்கு எதிராக 58 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோராக இருந்தது.

இந்தத் தோல்வி குறித்து கோலி கூறியதாவது: 

இந்த மோசமான தோல்வி. கவனக்குறைவான பேட்டிங். மனத்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நன்றாக பெளலிங் செய்ததால் இலக்கை எட்டமுடியும் என்றுதான் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. என்னால் இப்போது ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனால் இது ஏற்றுக்கொள்ளமுடியாத தோல்வி. இந்தத் தோல்வியைப் பெரிதாக ஆராய முடியாது. அந்தளவுக்கு மோசம். இதை மறந்துவிட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும். இதுபோல மீண்டும் இந்த ஐபிஎல்-லில் விளையாட மாட்டோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.