ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மியாமி மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் ஃபெடரர், நடால்!

மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் 5-ஆவது முறையாக பங்கேற்றுள்ள நடால், இதுவரை ஒரு முறைகூட...

News image
Updated On :1 ஏப்ரல் 2017, 5:07 am

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஃபெடரர் 7-6 (11/9), 6-7 (9/11), 7-6 (7/5) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸைக் கடும் போராட்டத்துக்குப் பிறகு தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த சீசனில் இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி, அதில் 18-ல் வெற்றி கண்டுள்ளார்.

இதேபோல அரையிறுதியில் நடால் 6-1, 7-5 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றில் ஃபெடரருடன் மோதவுள்ளார். நடாலும், ஃபாக்னினியும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் நடால் 8 முறையும், ஃபாக்னினி 3 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் 5-ஆவது முறையாக பங்கேற்றுள்ள நடால், இதுவரை ஒரு முறைகூட இங்கு பட்டம் வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை தீர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.