எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வதந்திகளின் நாயகர்கள் படைத்த 'முக்கிய' சாதனை!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஜோடி இணைந்து இந்த முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:47 am

Raghavendran

சமீபகாலமாக அதுவும் குறிப்பாக 2019 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், இந்திய பேட்டிங்கின் தூண்களாகத் திகழும் இவ்விருவரும் இணைந்து புதிய சாதனைப் படைத்துள்ளனர். 

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20, ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது.

முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 2-ஆவது ஒருநாள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இணைந்து அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடிகளில் இரண்டாம் இடம்பிடித்தது.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடிகளின் விவரம் பின்வருமாறு:

  • 8,227 - சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி
  • 4,729* - ரோஹித் ஷர்மா, விராட் கோலி
  • 4,727* - ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன்
  • 4,387 - சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக்
  • 4,332 - ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.