நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

சித்தார்த் கௌல் அபாரம்: 125 ரன்களுக்கு கட்டுப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 125 ரன்களுக்கு கட்டுப்பட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:42 pm

Raghavendran

2018-ஆம் ஆண்டு நடைபெறும் 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இப்போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சாம்சன் 49 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். சன்ரைஸர்ஸ் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய சித்தார்த கௌல் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷகிப்-அல்-ஹசன் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இரு அணி வீரர்கள் விவரம்:

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்:

ஷிகர் தவன், கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுப் பதான், ஷகிப்-அல்-ஹசன், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரஷித் கான், புவனேஸ்வர் குமார், பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கௌல்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), டி ஆர்கி ஷார்ட், சஞ்சூ சாம்சன் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, ஜோஸ் பட்லர், கே.கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், தவல் குல்கர்னி, ஜெயதேவ் உனாட்கட், பென் லாஃப்லின். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.