நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கேப்டன் கம்பீர் அரைசதம்: டேர்டெவில்ஸ் 166 ரன்கள் குவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான 2-ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:41 pm

Raghavendran

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான 2-ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 7-ஆம் தேதி) கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், 2-ஆவது லீக் ஆட்டம் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் பஞ்சாப்பில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் கௌதம் கம்பீர் 55 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் 28, கிறிஸ் மோரிஸ் 27 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் மோஹித் ஷர்மா, முஜீப்-உர்-ரஹ்மான். ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.