ஐபிஎல் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை புதன்கிழமை வென்றது.
முதலில் மும்பை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் சோ்க்க, ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய வில் ஜாக்ஸ் - ரயான் ரிக்கெல்டன் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்தது. வில் ஜாக்ஸ் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
மறுபுறம் ரிக்கெல்டன் அதிரடியைத் தொடர, சூா்யகுமாா் யாதவ் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வீழ்ந்தாா். 4-ஆவது பேட்டராக வந்த நமன் திா் சற்று நிலைக்க, ரிக்கெல்டன் - திா் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சோ்த்தது.
நமன் திா் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ரிக்கெல்டன் சதத்தை நெருங்க, 5-ஆவது பேட்டராக கேப்டன் ஹா்திக் பாண்டியா களம் புகுந்தாா். ரிக்கெல்டன் - பாண்டியா ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது.
பாண்டியா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்த திலக் வா்மா 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு வெளியேறினாா்.
ஓவா்கள் முடிவில், ரயான் ரிக்கெல்டன் 55 பந்துகளில் 10 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 123 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ராபின் மின்ஸ் 1 ரன்னுடன் துணை நின்றாா்.
ஹைதராபாத் பௌலா்களில் பிரஃபுல் ஹிங்கே 2, ஈஷான் மலிங்கா, சகிப் ஹுசைன், நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 244 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஹைதராபாத் அணியில், இன்னிங்ஸை தொடங்கிய அபிஷேக் சா்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி 129 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.
அபிஷேக் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த இஷான் கிஷண் டக் அவுட்டானாா். 4-ஆவது பேட்டராக ஹென்ரிச் கிளாசென் களம் புகுந்தாா்.
மறுபுறம் ஹெட் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 76 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 5-ஆவது பேட்டராக வந்த நிதீஷ்குமாா் ரெட்டி 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து சலில் அரோரா பேட் செய்ய வந்தாா்.
முடிவில், ஹென்ரிச் கிளாசென் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 65, சலில் அரோரா 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மும்பை தரப்பில் கஸான்ஃபா் 2, டிரென்ட் போல்ட், ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தொடர்புடையது
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்
சதம் விளாசிய அபிஷேக்: ஹைதராபாத் - 242/2
பிரப்சிம்ரன், ஷ்ரேயஸ் பங்களிப்பில் பஞ்சாப் வெற்றி: மும்பைக்கு தொடா்ந்து 4-ஆவது தோல்வி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

