/

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் வெற்றி சதவிகிதம்..! ஆர்சிபிக்கு 7-ஆவது இடம்!

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் அணிகளின் வெற்றி சதவிகிதம் குறித்து...

News image
ஆர்சிபி அணியினர்- படம்: எக்ஸ் / ஆர்சிபி.
Updated On :29 மே 2025, 11:23 am

DIN

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸில் ஒவ்வொரு அணிகளின் வெற்றி சதவிகிதம் குறித்த பட்டியலில் ஆர்சிபி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பை, சிஎஸ்கே தலா 5 கோப்பைகளை வென்றுள்ளன.

18-ஆவது சீசன்களின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று குவாலிஃபயர் 1-க்கான போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் முல்லான்பூரில் மோதுகின்றன.

எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

18 ஆண்டுகளாக கோப்பையே வெல்லாத ஆர்சிபி அணி இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

லீக் போட்டிகளில் அசத்தும் ஆர்சிபி அணிக்கு பிளே-ஆஃப்ஸ் போட்டிகளே எமனாக இருந்து வருகின்றன.

பிளே-ஆஃப்ஸில் வெற்றி சதவிகித பட்டியல்

1. கேகேஆர் - 66.67 சதவிகிதம் (15 போட்டிகளில் 10 வெற்றிகள்)

2. சிஎஸ்கே - 65.39 சதவிகிதம் (26 போட்டிகளில் 17 வெற்றிகள்)

3. மும்பை - 65 சதவிகிதம் (20 போட்டிகளில் 13 வெற்றிகள்)

4. குஜராத் - 60 சதவிகிதம் (5 போட்டிகளில் 3 வெற்றிகள்)

5. ராஜஸ்தான் - 45.55 சதவிகிதம் (11 போட்டிகளில் 5 வெற்றிகள்)

6. சன்ரைசர்ஸ் - 42.86 சதவிகிதம் (14 போட்டிகளில் 6 வெற்றிகள்)

7. ஆர்சிபி - 37.50 சதவிகிதம் (16 போட்டிகளில் 6 வெற்றிகள்)

8. பஞ்சாப் - 25 சதவிகிதம் (4 போட்டிகளில் 1 வெற்றி)

9. தில்லி - 18.18 சதவிகிதம் ( 11 போட்டிகளில் 2 வெற்றிகள்)

10. லக்னௌ - 0 சதவிகிதம் (2 போட்டிகள் 0 வெற்றி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.