டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?

ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் விமர்சனம் செய்தது குறித்து...

News image
ரோஹித் சர்மா. - ஏபி
Updated On :30 மார்ச் 2025, 9:18 am

DIN

முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரோஹித் சர்மா தினமும் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் முதலிரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. இதில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.

முதல் போட்டியில் 0, 2ஆவது போட்டியில் 8 ரன்களுக்கு போல்ட் ஆனார்.

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா மோசமான நிலையில் இருக்கிறார். 3, 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ரோஹித் சர்மா தற்போது இல்லை.

தினமும் காலையில் கடினமாக உழைத்து தன்னை சிறந்த நிலையில் வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் ரோஹித் சர்மா.

சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தபோது

சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தபோது

ஏனெனில், அவரை விட்டு பேட்டிங் கை நழுவிச் செல்கிறது. அவர் இப்போதும் தன்னுடைய இயற்கையான திறமைகளையும் உள்ளுணர்வுகளை மட்டுமே நம்பியிருக்கிறார்.

வான்கடே பிட்ச்சிலும் மும்பை தோற்கும்

ஏபிடி, கிளாசன் தவிர மற்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்திய மண்ணில் சரியாக விளையாடுவதில்லை.

ரியான் ரிக்கல்டனுக்கு சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும். அவரைத் தவிர்த்து, திலக் வர்மா, சூர்யகுமார், ராபின் மின்ஸ் ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.

பேட்டிக்கு பந்து வருமென இவர்கள் நம்பியிருக்கிறார்கள். வேகமும் பவுன்சர்களும் இருக்கும் வான்கடே பிட்ச்சிலும் மும்பை அணி 12 அல்லது 13 ரன்கள் தேவைப்பட்ட இலக்கினை வெற்றி பெறாது. வேண்டுமானால் இலக்கிற்கு அருகில் வரலாம்.

அணிக்கு என்ன பிரச்னை?

குஜராத் டைட்டன்ஸ் முதலிரண்டு விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தனர். ஆனால், மும்பை அணி 35க்கு 2 விக்கெட்டுகள் ஆனார்கள். அதன்பிறகு திலக், சூர்யகுமார் பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டியுள்ளது. பின்னர் 190 ரன்களை துரத்திச் செல்லுவது கடினமாகிறது.

கடைசி நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பேட்டிங் நன்றாக செய்தார்கள். ஒரு ஓவரில் 15 அல்லது 20 ரன்கள் இருக்குமாறு விளையாடினார்கள்.

ஆட்டத்தில் ஈரப்பதமும் வரவே இல்லை. அதனால், மும்பை அணிக்கு எல்லாம் பின்னடைவையே ஏற்படுத்தியது.

இவையெல்லாம்விட 2 தோல்விகள் என்பது மும்பை இந்தியன்ஸுக்கு சகஜமானதுதான். அப்படி இருந்தும் சரியான வழியில் சென்றால் கோப்பையை வெல்லலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.