ஹார்திக் பாண்டியா 3.0..! இம்பாக்ட் பிளேயர் விதிமுறையால் பாதிப்படையும் ஆல்-ரவுண்டர்கள்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் முழுமையான பேட்டி...


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இம்பாக்ட் விதிமுறைகள், ஐபிஎல் கோப்பை வெல்வது, வீரர்கள் குறித்து பேசியுள்ளார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன. இதில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2023ஆம் ஆண்டு முதல் 2027 வரை இருக்குமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்பாக்ட் பிளேயர் என்றால் என்ன? பந்துவீச்சு அல்லது பேட்டிங் யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம் என இந்த விதி கூறுகிறது.

ஹார்திக் பாண்டியா
சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே பேட்டராக பயன்படுகிறார். பந்துவீச்சில் அவருக்குப் பதிலாக ஒரு பௌலரை தேர்ந்தெடுக்கலாம்.
இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:
இம்பாக்ட் பிளேயர் விதிமுறையால் பாதிப்படையும் ஆல்-ரவுண்டர்கள்
தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் 50-50 ஆல்ரவுண்டராக இல்லையெனில் உங்களது இடத்தைப் பிடிப்பது கடினமாக இருக்கிறது.
காலப்போக்கில் இதெல்லாம் மாறுமா அல்லது இல்லையா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், நிச்சயமாக ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.
வறட்சியில் மும்பை இந்தியன்ஸ்
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது எப்போதும் பெருமிதம் நிறைந்தது. இந்தியாவுக்குதான் என் முதன்மையான முன்னுரிமையை தருவேன்.
2 கோப்பைகளை வென்றது மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. அதை அப்படியே ஐபிஎல்-க்கும் கடத்த வேண்டுமென நினைக்கிறேன்.
கடந்த 4 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வறட்சியாகவே இருந்துள்ளன. இந்த சீசன் மகிழ்ச்சியும் தோழமையுணர்ச்சியும் இருக்குமாறு விளையாடுவோம்.
ஹார்திக் பாண்டியா 3.0
எனது வாழ்க்கை உயர்வு, தாழ்வுகளாக இருந்துள்ளன. இதில் கற்றுக்கொண்டதை மகிழ்கிறேன்.
சில ஆண்டுகளாக இதுதான் எனக்கு வாழ்க்கை, விளையாட்டு குறித்து கற்றுக்கொடுத்துள்ளது. இது புதிய ஆண்டு. நிறைய மாறிவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 0.க்கு பக்கத்தில் எதாவது சேர்க்க வேண்டும். தற்போது, 3.0 என அழைக்கலாம். விளையாட்டு மீதான ஆர்வம், சவால், மன உறுதி ஆகியவை எனக்குப் பிடிக்கும்.
சவால்களை வீரர்களிடம் அளிக்கும்போது என்னால் அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை நான் முக்கியமாகப் பார்க்கிறேன்.
ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறுவது எளிதல்ல
நான் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட முயல்கிறேன். குறிப்பிட்ட வரிசையில்தான் விளையாட வேண்டும் என்பது என்னுடைய பயணத்தில் முடிந்து விட்டது.
கோப்பையை வெல்லும்போதெல்லாம் எங்களது குழுவின் முக்கியமான அங்கத்தினர்களை நம்பியிருக்கிறோம்.
ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறுவது எளிதல்ல. முக்கியமானவர்களுடன் அனுபவமிக்க போல்ட், தீபக் சஹார் வந்திருப்பது கூடுதல் பலம்.
ரோஹித்துடன் நல்ல பேச்சுவார்த்தை உள்ளது. பும்ராவும் நானும் விளையாட மாட்டோம். சென்னை சென்றதும் அதற்கேற்ப அணியை தீர்மானிப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...