டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காதலர் தினம்! கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா கொடுத்த சர்ப்ரைஸ்!

காதலர் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா தன்னுடைய காதலிக்கு சிறப்புப் பரிசளித்துள்ளார்.

News image
காதலியுடன் ஹார்திக் பாண்டியா
Updated On :14 பிப்ரவரி 2026, 5:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா காதலர் தினத்தில், தன்னுடைய காதலி மஹிகா ஷர்மாவுக்கு ஒரு புதிய பரிசை அளித்துள்ளார். அது அவரது பின் கழுத்தில் போடப்பட்ட அழகிய டாட்டூ.

ஆனால் இது வெறும் அழகியலுக்கு அப்பாற்பட்டு, மஹிகா என்பதைக் குறிக்கும் ஆங்கில M என்ற எழுத்தின் பின்னணியில் இரண்டு சிறுத்தைகள் தங்களுடைய பலம் மற்றும் தோழமையை ஒன்றிணைக்கும் நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரபல டாட்டூ கலைஞர் சன்னி பானுஷாயின் கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு ஏலியன்ஸ் டாட்டூ வடிவில் முன்னணி கலைஞர் துஷார் மரானேவால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டாட்டூ, ஹார்திக் பாண்டியாவின் வருங்கால மனைவி மஹிகாவுடனான காதல், அடையாளம் மற்றும் தோழமை பற்றிய ஆழமான அழகிய கதைகளைச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

டாட்டூ கலைஞர்களை அணுகிய ஹார்திக், தனக்கும், தன்னுடைய காதலிக்கும் உள்ள மிக அழகான உறவை வெளிப்படுத்தும் வகையில் ஒரு டாட்டூவை உருவாக்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, டாட்டூ கலைஞர்கள் இரண்டு சிறுத்தைகளை அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். ஒரு சிறுத்தை முழுமையாக வடிவமைக்கப்பட்டு சக்தி, ஆக்கம், இலக்கு என்பதை நோக்கி ஓடுவது போலவும், இரண்டாவது சிறுத்தை ஒரு நிழல் போல வரையப்பட்டு, முதல் சிறுத்தைக்கு இணையாக பயணிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இவையாவும் எம் என்ற எழுத்தின் பின்னணியில் அமைந்துள்ளது.

அவரது காதலிக்கு, இந்த காதல் தினத்தில் ஹார்திக் பாண்டிய கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாகவும் இது அமைந்துவிட்டது.

summary

Cricketer Hardik Pandya has given a special gift to his girlfriend on Valentine's Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.