மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல்லை எட்டவிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமாகிய ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடக் கூடியவர்.
சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் இருந்து வந்த ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 2 அரைசதங்களை அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
மும்பையின் வான்கடே திடலில் இன்று மதியம் (ஏப்.27) லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.
இந்தப்போட்டியில் ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைய நிகழ்த்துவார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் கிறிஸ் ஜெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்
1.கிறிஸ் கெயில் - 357 சிக்ஸர்கள் (மே.இ.தீ.வீரர்)
2. ரோஹித் சர்மா - 295 சிக்ஸர்கள் (இந்தியர்)
3. விராட் கோலி - 285 சிக்ஸர்கள் (இந்தியர்)
4. எம்.எஸ்.தோனி - 260 சிக்ஸர்கள் (இந்தியர்)
5. ஏபிடி வில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள் (தெ.ஆ.வீரர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இதை மட்டும் செய்யாதே..! அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர்!

டி20 உலகக் கோப்பையின் 3 போட்டிகளிலும் டக் அவுட்டான அபிஷேக் சர்மா!

டி20 உலகக் கோப்பையை வெல்ல இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு முக்கியம்: ரோஹித் சர்மா

காயம் காரணமாக கமலினி விலகல்; மும்பை அணியில் வைஷ்ணவி சர்மா சேர்ப்பு!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

