டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.

News image
- படம் |AP
Updated On :24 ஏப்ரல் 2025, 12:25 pm

DIN

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான டிராவிஸ் ஹெட் (0 ரன்), அபிஷேக் சர்மா (8 ரன்கள்), இஷான் கிஷன் (1 ரன்), நிதீஷ் ரெட்டி (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தவறாக கணித்துவிட்டோம்

மும்பைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டேனியல் வெட்டோரி

டேனியல் வெட்டோரி

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். போட்டிக்கான ஆடுகளம் முன்பு இருந்ததைப் போன்று இல்லை. இந்த ஆடுகளத்தில் 250 - 280 ரன்கள் குவிக்க முடியும் என நினைத்தோம். ஆனால், ஆடுகளத்தில் மிகப் பெரிய மாற்றம் இருந்தது.

முதல் இரண்டு ஓவர்களை கடந்த பிறகு, இந்த ஆடுகளத்தில் 250 - 260 ரன்கள் குவிக்க முடியாது என்பதை உணர்ந்தோம். பவர் பிளேவை பயன்படுத்திக் கொண்டு அதிக ரன்கள் எடுக்க நினைத்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை என்பதை உணர்ந்தவுடன், 180 ரன்கள் எடுக்கும் அளவுக்கு விளையாட வேண்டும் என நினைத்தோம். ஆனால், விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த ரன்களை குவிக்க முடியவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.