டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரென்ஷா போராட்டம் வீண்..! ஆஸி.க்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே!

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியின் அசத்தல் வெற்றி குறித்து...

News image
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜிம்பாப்வே அணியினர் - படம்: ஏபி
Updated On :13 பிப்ரவரி 2026, 12:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் முஜர்பானி 4 விக்கெட்டுகள், பிராட் எவான்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீசியது.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 169/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸி. அணியில் தனியாளாகப் போராடிய மாட் ரென்ஷா 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் டிம் டேவிட், கேமரூன் கிரீன் ட்க் அவுட் ஆனார்கள்.

முன்னதாக, 2007 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.