டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியதாவது...

News image
ஹார்திக் பாண்டியா- படம்: ஐபிஎல்
Updated On :24 ஏப்ரல் 2025, 6:37 am

DIN

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் நேற்றிரவு (ஏப்.23) வீழ்த்தியது.

முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 143 ரன்கள் சோ்க்க, மும்பை 15.4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.

தொடர்ச்சியாக 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்த மும்பை, புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த சீசனில் மோசமாக விமர்சிக்கப்பட்ட பாண்டியாவின் கேப்டன்சி (தலைமைப் பண்பு) தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

கேப்டன்சி உள்ளுணர்வினால் ஆனது

வெற்றிக்குப் பின்புறமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது அணி வீரர்கள் தருணத்தை சரியான வழியில் எடுத்துச் செல்கிறார்கள்.

ரோஹித், தீபக் சஹார், போல்ட், சூர்யகுமார் என அனைவரும் ஃபார்முக்கு திரும்பியதால் இது ஒரு முழுமையான ஆதிக்கமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஒரு அற்புதமான வெற்றி.

சஹாருக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்கள் அளிக்கக் காரணம் அவர் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருந்தார். சில நேரங்களில் கேப்டன்சி (தலைமைப் பண்பு) என்பது உள்ளுணர்வினால் ஆனது.

ஏற்கனவே திட்டமிட்டு இருந்தாலும் போட்டியின் சூழலுக்கு ஏற்பவே நான் எனது முடிவுகளை எடுப்பேன்.

இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்

விக்னேஷ் புதூரை களமிறக்கியதற்கு காரணம் விக்கெட்டின் தேடலில்தான். ஆனால், இதுவும் நடக்குமெனத் தெரியும். அவர் குறைவான போட்டிகளே விளையாடியுள்ளார். அதனால், இப்படி நடக்கும் என்பதை புரிந்துக்கொள்கிறேன்.

பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என அனைத்திலும் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இது குறித்து நாங்கள் அதிகமாக கலந்துரையாடியுள்ளோம்.

ஒவ்வொரு போட்டியாக வெற்றிபெற நினைக்கிறோம். இந்த வெற்றியின் மூலமாக மிகவும் திருப்தியாக இருக்கிறோம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.