பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு: லோக்கி பெர்குசன் அறிமுகம்!
பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு: லோக்கி பெர்குசன் அறிமுகம்..


ஐபிஎல் தொடரின் லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 13-வது போட்டி லக்னௌவில் உள்ள எக்கானா மைதானத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
முதல் போட்டியில் அபார வெற்றிபெற்ற பஞ்சாப் அணியும், ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்திய முனைப்புடன் களமிறங்குவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங், ஸ்டாய்னிஸ், மெக்கல்லம் உள்ளிட்டோர் இருப்பதால் அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது. அதே நேரத்தில் லக்னௌ அணியிலும் கேப்டன் ரிஷப் பந்த், பூரான், மார்ஷ், மில்லர் உள்ளிட்டோரும் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர்களாக உள்ளனர்.
கடந்தாண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் லோக்கி பெர்குசன் முதல் முறையாக பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...