/

லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்: சன்ரைசர்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:00 am

DIN

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. 

ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். 

பஞ்சாப் அணியின் கேப்டன் மயங் அகர்வால் காயம் காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன், ஷாரூக்கான் ஆகியோரைத் தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை.

அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 33 பந்துகளில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷாரூக்கான் தன் பங்கிற்கு 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 4, புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.