லியம் லிவிங்ஸ்டன் அதிரடி: சென்னை அணிக்கு 181 ரன்கள் இலக்கு
லியம் லிவிங்ஸ்டன் அதிரடியால் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.


லியம் லிவிங்ஸ்டன் அதிரடியால் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 11-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையின் பார்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.
ஆனால் மயங் அகர்வால் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ராஜபக்சவும் 9 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன், ஷிகர் தவானுடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தார். பஞ்சாப் அணியின் ரன்கள் 109 இருந்தபோது ஷிகர் தவான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய லியம் லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜோர்டான், டுவெய்ன் பிரெடோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...