சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயமடைந்த ராமகிருஷ்ண கோஷுக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட இந்தியா முழுவதும் உள்ள 14 நகர்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சென்னை அணி சமீபத்திய வெற்றிகளால் மீண்டும் ஃபிளே ஆப் சுற்றை நோக்கி முன்னேறி வருகிறது.
தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டு வந்த சென்னை அணியில் வீரர்கள் காயமடைவதும் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோர் காயமடைந்தது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மே 3 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை வீரர் ராமகிருஷ்ண கோஷ் காலில் காயமடைந்தார்.
வலது காலில் காயம் அடைந்த ராமகிருஷ்ண கோஷுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. ராமகிருஷ்ண கோஷுக்குப் பதிலாக மெக்னெய்ல் நொரோன்ஹாவை ரூ. 30 லட்சத்துக்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு ஆல்-ரவுண்டரான நொரோன்ஹா, 2024 - 2025 ஆம் ஆண்டு கர்னல் சி.கே. நாயுடு கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்காக, பிசிசிஐயின் நமன் விருதுகளில் எம்.ஏ. சிதம்பரம் கோப்பையை வென்றார். அதைத் தொடர்ந்து ஷையத் முஷ்டாக் அலி தொடரிலும் இவர் விளையாடியுள்ளார்.
Summary
Chennai Super Kings (CSK) have picked a player replacement for Ramakrishna Ghosh, who injured his right foot during their game against Mumbai Indians on May 3rd. He has been ruled out for the season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











