மும்பையில் இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான புதிய வீரர் ரகு சர்மா (33 வயது) தனது 15 ஆண்டுகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை டாஸ் வென்று பந்துவீச, லக்னௌ அணி 20 ஓவர்களில் 228/ 5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய 18.4 ஓவர்களில் 229/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரகு சர்மா தனது இரண்டாவது ஐபிஎல் போட்டியை விளையாடுகிறார். அவர் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 13ஆவது ஓவரில் அக்ஷத் ரகுவன்ஷியை ஆட்டமிழக்க வைத்தார்.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இவர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த துண்டுச் சீட்டை கையில் எடுத்து காண்பிப்பார். இது இணையத்தில் வைரலானது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
பஞ்சாபைச் சேர்ந்த இவர் எல்கட்ரிகல் என்ஜினியர் ஆக விரும்பியுள்ளார். 2011 உலகக் கோப்பை வெற்றியினால் இவர் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்டுள்ளார்,
வேகப் பந்துவீச்சாளராக தொடங்கிய தனது பயணத்தை லெஜண்டரி வீரர் மதன் லால் சுழல் பந்துவீச்சாளராக மாற்றினார். இணையத்தின் மூலமாக ஷேன் வார்னேவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இணையத்தில் இருக்கும் அந்த விடியோவைப் பார்த்துதான் அவர் சுழல்பந்து வீச்சைக் கற்றுக்கொண்டுள்ளார். போட்டிக்குப் பிறகு ரகு சர்மா கூறியிருப்பதாவது:
மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். எங்களது குடும்பத்தில் அனைவரும் என்ஜினியராக இருப்பார்கள். நான் 102 கிலோ உடல் எடையுடன் இருந்தேன். தோனி 2011ல் அடித்த சிக்ஸர் என்னை உத்வேகப்படுத்தியது. அப்போது என்னாலும் முடியுமெனத் தோன்றியது. ஆனால், எனது தந்தை நான் குண்டாக இருப்பதால் முடியாது என்றார்.
நான் கடினமாக உழைத்தேன். 21 வயதில் தொடங்கினேன். அங்கிருந்து விடாமுயற்சியுடன் போராடினேன். இலங்கை, இங்கிலாந்தில் விளையாடி அனுபவம் பெற்றேன். வயது ஒரு எண் என்று மட்டுமே சொல்லமாட்டேன். ஆனால், நீங்கள் உடல்நலத்துடனும் மனநலத்துடனும் இருக்க வேண்டும். திறமையைவிட பக்குவம் அதிகம் தேவைப்படுகிறது.
புரி ஜகந்நாத் எனக்கு ஆதரவாக இருக்கிறார். அங்கு பிரசாதம் வாங்கி சாப்பிட்டு கடற்கரையில் பயிற்சி செய்துள்ளேன். வாரத்தில் 6 நாள்கள் லெக் ஸ்பின் பயிற்சி செய்கிறேன். தற்போதும் 10 ஓவர்கள் பயிற்சி எடுக்கிறேன். 15 ஆண்டுகளாக பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன் என்றார்.
Summary
The wait of 15 painful years has been ended Raghu Sharma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓரங்கட்டப்படும் ஹார்திக் பாண்டியா?

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



