ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் காயம் காரணமாக தாயகம் திரும்பியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கின்போது, பில் சால்ட்டுக்கு காயம் ஏற்பட்டது.
அந்தப் போட்டிக்குப் பிறகு பில் சால்ட் கடந்த மூன்று போட்டிகளாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக விராட் கோலியுடன் ஜேக்கப் பெத்தேல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
இந்த நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று போட்டிகளாக விளையாடாமலிருந்த பில் சால்ட் தற்போது தாயகம் திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பில் சால்ட், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அறிவுரையை ஏற்று விரலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு ஸ்கேன் செய்வதற்காக இங்கிலாந்து திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக தாயகம் திரும்பியுள்ள பில் சால்ட் விரைவில் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பில் சால்ட் 202 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Royal Challengers Bangalore opener Phil Salt has returned home due to an injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










