இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சூர்யவன்ஷியை மிரட்டிய ஜேமிசனுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி!

தில்லி கேபிடல்ஸ் வீரருக்கு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்பட்டது குறித்து...

News image

சூர்யவன்ஷி விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜேமிசன். - படம்: ஏபி

Updated On :2 மே 2026, 12:59 pm IST

தில்லி கேபிடல்ஸ் வீரர் கைல் ஜேமிசனுக்கு ஐபிஎல் நிர்வாகம் ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கியுள்ளது. சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 225/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 19.1 ஓவர்களில் 226/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடியான தொடக்க வீரர் சூர்யவன்ஷி (15 வயது) 1.5ஆவது பந்தில் கைல் ஜேமிசன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட்டின் போது சூர்யவன்ஷிக்கு அருகில் சென்ற கைல் ஜேமிசன் ஆக்ரோஷமாக கொண்டாடுவார். இது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால், லெவல் 1 குற்றத்திற்காக எச்சரிக்கையும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியுற்றாலும் நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது.

Summary

DC's Jamieson handed demerit point for Sooryavanshi send off

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.