தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோல்விக்கு காரணம் இதுதான்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர் கூறியதென்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கான காரணத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

News image

டேனியல் வெட்டோரி - படம் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)

Updated On :29 மார்ச் 2026, 11:56 am

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கான காரணத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று (மார்ச் 28) மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். படிக்கல் 26 பந்துகளில் 61 ரன்களும் (7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்), விராட் கோலி 38 பந்துகளில் 69* ரன்களும் (5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

இந்த நிலையில், மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதும், தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி இருவரும் அதிக ரன்கள் குவிக்க அனுமதித்ததுமே அணியின் தோல்விக்கு காரணமென சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் போட்டி நிறைவடைந்த பிறகு பேசியதாவது: பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. பில் சால்ட்டின் விக்கெட்டினை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வீழ்த்தினோம். ஆனால், அதன் பின் எங்களால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் மிகவும் அபாரமாக விளையாடினர். அவர்கள் அதிக ரன்கள் குவிக்க நாங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். பெங்களூருவுக்கு எதிராக நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. எங்கது மோசமான பந்துவீச்சில் இந்தப் போட்டியும் ஒன்றாக இணைந்துள்ளது என்றார்.

Summary

Sunrisers Hyderabad coach Daniel Vettori has revealed the reason for the team's defeat against Royal Challengers Bangalore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.