ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக விளையாடவில்லை என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று (மார்ச் 28) தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது முடிந்துபோன விஷயம் எனவும், நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக விளையாடவில்லை எனவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது முடிந்துபோன விஷயம். நாங்கள் நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடவில்லை. இந்த சீசனில் ஒரு அணியாக நன்றாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுகிறோம். அப்படி விளையாடினால், அடுத்த கோப்பையை வெல்ல அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் அதன் அடுத்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Summary
Royal Challengers Bangalore captain Rajat Patidar has stated that they are not playing in the IPL tournament with the aim of retaining the defending champion title.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில் சால்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

சராசரி 65, ஸ்டிரைக் ரேட் 214... மிடில் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் ரஜத் படிதார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



