நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இளம் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பரும் பேட்டருமான கானர் எஸ்டர்ஹுய்சன் (24 வயது) தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
டி20 தொடரில் 2-2 என சமநிலையில் இருக்க, முக்கியமான கடைசி டி20 போட்டியில் 33 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தார். இந்தக் காரணத்தினால் கடைசி போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
நியூசிலாந்து மண்ணில் 2022க்குப் பிறகு முதல்முறையாக இருதரப்பு தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றது. இந்தத் தோல்விக்கு தற்போது பழிவாங்கியுள்ளது.
இந்த டி20 தொடரில் கானர் எஸ்டர்ஹுய்சன் 200 ரன்கள் எடுத்தார். இதில், 16 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 145.98ல் விளையாடினார்.
தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் 2001ல் பிறந்த இவர் விட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2022ல் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.
ஐஎல்டி20, எஸ்ஏ20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடந்து கடந்த 2023ல் தென்னாப்பிரிக்கா ஏ அணியில் இடம் பிடித்து அசத்தினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான இவர் தனது முதல் போட்டியிலேயே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்.
இரண்டு, மூன்றாவது போட்டிகளில் சொதப்பிய இவர் நான்காவது போட்டியில் 54, கடைசி போட்டியில் 75 ரன்கள் எடுத்து இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வென்றார். அறிமுகமான தொடரிலேயே தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
Summary
The Young South African Player Who Won the Player of the Series Award! Who Is This Connor Esterhuizen?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சனுக்கு சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

57-0: மும்பையின் துரந்தர் ஷர்துல் தாக்குர்..! ஜாலியாக விமர்சிக்கும் மும்பை, சிஎஸ்கே ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை தோல்விக்கு நியூசிலாந்தை டி20 தொடரில் பழிவாங்கிய தென்னாப்பிரிக்கா!

முதல் டி20 போட்டி: நியூசி.யை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



