கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் 12 ஆம் எண் கொண்ட ஜெர்ஸிக்கு ஓய்வளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு அணிகளும், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொல்கத்தா அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ஆண்ட்ரே ரஸ்ஸலை கௌரவிக்கும் விதமாக, அவரின் 12 என்ற எண் அச்சிட்ட ஜெர்ஸிக்கு ஓய்வளிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஒருமுறை இந்த ஜெர்ஸிக்கு ஓய்வளித்தால், அடுத்துவரும் வீரர்கள் இந்த எண்ணை பயன்படுத்த முடியாது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர்கள் பட்டாளத்தில் முதன்மையானவரான ஆண்ட்ரே ரஸல், ஜூலை 23 ஆம் தேதி அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
ஐபிஎல் தொடரில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், தன்னை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்காததால் திடீரென ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல்லில் இதுவரை 140 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஸல், கேகேஆர் அணிக்காக மட்டும் 133 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, மொத்தமாக 2651 ரன்கள் எடுத்திருக்கிறார்.
கொல்கத்தா அணியினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்கும் நைட்ஸ் அன்ப்ளக்டு நிகழ்ச்சி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கொல்கத்தா தலைமை நிர்வாகச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ரஸ்ஸலை கௌரவிக்கும் விதமாக, ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸி ஓய்வுபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரிங்கு சிங்கைத் தங்களது அணியின் துணை கேப்டனாக கொல்கத்தா அணி நியமித்தது.
கடந்த சீசனில் எட்டாவது இடத்தைப் பிடித்த முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி மீண்டும் எழுச்சிப் பெரும் முனைப்பில் மிகத்தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
கொல்கத்தா அணி மார்ச் 29 ஆம் தேதி வான்கடே திடலில் நடைபெறும் தங்களுக்கான முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.
Summary
IPL 2026: Kolkata Knight Riders on Tuesday retired Andre Russell's No. 12 jersey in honour of his contributions to the team. Russell, who retired from IPL last year, joined the backroom staff for the upcoming season, starting March 28.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

என் மீதான பொறாமையினால் விமர்சிக்கிறார்கள்..! தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் ரஹானே!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


