ஐபிஎல் 2026 சீசனுக்காக பஞ்சாப் கிங்ஸ் சுழல்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் (35 வயது) தனது குடிப் பழக்கத்தைக் கைவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 2011ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் வாங்கப்பட்ட சஹால் 2013ல்தான் முதல் போட்டியில் விளையாடினார். பின்னர், ஆர்சிபியில் 2014ல் இணைந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
தற்போது, ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் வாங்கப்பட்ட சஹால் 2025 முதல் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் 16 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றிலேயா அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஏபி டி வில்லியர்ஸ் யூடியூப் பக்கத்தில் அவருடன் உரையாடினார். இந்த உரையாடலில் அவர் பேசியிருப்பதாவது:
கேகேஆர் போட்டிக்குப் பிறகு, எனது இடுப்பெலும்பில் காயம் ஏற்பட்டது. தொடரின் பிற்பாதியில் கைவிரல் கணுக்காலிலும் காயம் அடைந்தது. அதனால் அரையிறுதி, இறுதிப் போட்டியில் என்னால் முழுமையான லெக் ஸ்பின் பந்துவீச்சை அளிக்க முடியவில்லை. ஆனால், இந்த சீசனில் எனது உடலை முழுமையாக கவனித்துக் கொள்கிறேன்.
உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு நற்செய்தியும் இருக்கிறது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். கடைசி 6 மாதங்களாக குடிப்பதை நிறுத்திவிட்டேன்.
தற்போது, நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் எனது அணிக்காக 150 சதவிகிதம் அளிக்கவும் தயாராக இருக்கிறேன். ஒரு மூத்த வீரராக, மூத்த பந்துவீச்சாளராக என்னிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அளவுக்கு இருக்க விரும்புகிறேன்.
ரிக்கி பாண்டிங், ஸ்ரேயாஷ் ஐயர் தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தே இருப்பதால் அவர்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. மும்பையில் இருக்கும்போது ரிக்கி பாண்டிங் தலைமையில் விளையாடி இருக்கிறேன். அவரைப் பார்க்கும்போது எனது பங்கு என்ன என்பது குறித்து தெளிவாகப் பேசினார். அதுதான் ஒரு வீரருக்கு முக்கியமானது என்றார்.
Summary
Yuzvendra Chahal quits alcohol, focuses on fitness ahead of IPL 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருண் சக்ரவர்த்தி டி20யில் 200 விக்கெட்டுகள்!

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த டிம் டேவிட்!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

கூப்பர் கானலி ஐபிஎல் 2026ன் கண்டுபிடிப்பு..! சஹால் புகழாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



