யு19 இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி (14 வயது) துரந்தர் திரைப்படம்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
துரந்தர் திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளதால், 18 வயதுக்கு அதிகமானோர் மட்டுமே பார்வையிட வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிச.5 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் மிகுந்த வரவேற்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
பிசிசிஐ வழங்கும் நமன் விருது விழாவில் வர்ணனையாளர் அர்ஷா போக்லே, “உங்களுக்குப் பிடித்த படம் எது?” எனக் கேள்வி எழுப்புவார். அதற்குப் பதிலளித்த வைபவ் சூர்யவன்ஷி, “துரந்தர்” எனப் பதிலளிப்பார்.
ஏ சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பார்த்தது ஏன் என சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
யு19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி பாகிஸ்தான் பந்துவீச்சாளரைப் பார்த்து தனது காலணியைக் காண்பிப்பார். இந்த நிகழ்வு அப்போது மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தற்போது, துரந்தர் 2 (துரந்தர் தி ரிவெஞ்ச்) இன்றுமுதல் உலகம் முழுவதும் வெளியாகியது. இதன் சிறப்புக் காட்சிகள் நேற்று (மார்ச்.18) வெளியாகி சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Vaibhav Sooryavanshi, who was embroiled in controversy over the film Durandhar..! Is it a film that should be watched by a 14-year-old?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்கச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி!

வைபவ் சூர்யவன்ஷிக்கு பயம் துளியும் கிடையாது: ரவீந்திர ஜடேஜா

ஏலத்தில் எடுக்கப்பட்டபோது என்னுடைய நோக்கம் இதுதான்: வைபவ் சூர்யவன்ஷி

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



